Idli Benefits :உடல் எடையை குறைக்கும் இட்லியின் பயன்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளும் நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லியை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போறோம்.
அனைவரது வீட்டிலும் (Idli)இட்லி ஒரு காலை உணவாக தான் எடுக்கப்படுகிறது, ஆனால் அதன் பின் இருக்கும் மருத்துவ குணத்தையும் அந்த இட்லி நம் உடலில் செய்யும் வேலையும் இந்த பதிவில் பார்க்கலாம், அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் மற்றும் சுகர், பிபி ஆகியவற்றை கட்டுப்பாட்டாக வைக்கவும் இந்த இட்லி பயன்படுகிறது, அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் இந்த இட்லியை ஆராய்ச்சி செய்தது மிகவும் ஆச்சரியத்துடன் அவர்கள் சொல்வது இந்த இட்லியில் உள்ள வேதிப்பொருள் நம் உடலில் புதிய செல்கள் உருவாகுவதற்கு அதிக காரணமாக இருக்கின்றது அதைப் பற்றி மேலும் பார்ப்போம். வாங்க
இட்லியை பற்றி சில
தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளில் பல உணவுகள் உண்டு ஆனால் எல்லா உணவையும் தாண்டி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு எனில் அது இட்லி மட்டும்தான் அப்பேர்ப்பட்ட உணவை நம் தமிழ் மக்கள் நமக்கு கொடுத்து வைத்துள்ளார்.
வேறு ஒரு உணவைப்போல சீக்கிரம் சமைத்து விட முடியாது இட்லியின் பக்குவம் மிகவும் சரியானதாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் அதன் சுவை சரியானதாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி மற்றும் ஆரோக்கியத்துடன் கொள்ளும் உணவு இந்த இட்லி.
காய்ச்சல் வந்தாலும் (Idli)இட்லி உடல்நிலை சரியில்லினாலும் இந்த இட்லி தவிர வேற எந்த உணவையும் டாக்டர்கள் பரிந்துரைக்கவில்லை அப்படிப்பட்ட இட்லியை எவ்வாறு தயார் செய்வது மென்மையான இட்லியை எப்படி தயார் செய்வது என்ற முறையை பார்க்கலாம்.
இட்லி தயாரிக்கும் முறை
இட்லியை தயாரிக்கும் முறை மிகவும் எளிதானது ஆனால் சற்று கவனமாக கையாள வேண்டும் இட்லியின் அளவு பொறுத்தவரை மிகவும் செலவும் தான் இட்லி சாதாரண சாப்பாட்டு அரிசிகள் செய்ய இயலாது அதற்கு தனியாக இட்லி அரிசி என கடைகளில் விற்கப்படும்.
அதனை வாங்கி ஒரு கிலோ இட்லி அரிசிக்கு கால் கிலோ உளுந்து பருப்பு சேர்க்க வேண்டும். அதாவது ஒன்றில் கால் பங்கு உழுந்தம் பருப்பு இருக்க வேண்டும் நீங்கள் எவ்வளவு கிலோ அரிசி போடுகிறீர்களோ அதில் கால் பங்கு உழுந்தம் பருப்பு இருக்க வேண்டும், இவ்வாறு ஒன்றில் கால்பந்து உளுந்தும் அரிசியும் எடுத்துக் கொண்டு அரைப்பதற்கு முன்பு அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
உளுந்தை மட்டும் அரைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வர வைக்க வேண்டும் இவ்வாறு ஊற வைத்த பின்பு அரிசியை முதலில் அரைக்க வேண்டும் அதன் பக்குவம் மிகவும் நைசாக இல்லாமல் லேசாக பரபரப்பாக அரைக்க வேண்டும் பிறகு உளுந்தை அரைக்க வேண்டும் உளுந்தை மிகவும் நைசாக அரைக்க வேண்டும் இவ்வாறு அரைத்த பின்பு இரண்டையும் நன்கு நம் கைகளால் கலக்க வேண்டும் கணக்கிய பின்பு தேவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும் உப்பு சேர்த்து பின்பு ஒரு 2 மணி நேரம் இந்த அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டும் புளிக்க வைப்பது மிகவும் சுலபம்தான் வீட்டில் ஓரத்தில் எங்காவது வைக்க வேண்டும் அது தான் பிடித்துக் கொள்ளும் பிறகு அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப (Idli)இட்லி ஊற்றிக் கொள்ளலாம் அல்லது தோசை சுடலாம்,
இதையும் வாசியுங்கள் : இதயத்தை பாதுகாக்கும் இஞ்சியின்4 மருத்துவ பயன்கள்
இட்லி அவிக்கும் முறை
இட்லி அவிப்பது மிகவும் சுலபம்தான் இரண்டு மணி நேரம் புளித்த வீட்டு மாவை எடுத்து நன்கு மறுபடியும் கலக்க வேண்டும் இலக்கியக் கொண்டு இட்லி சட்டியை அடுப்பில் ஏற்றி இட்லி பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் நன்கு கொதித்த உடன் இட்லி தட்டில் துணி விரித்து அல்லது எண்ணெய் தடவி அந்த குழி நிரம்பும் வரை இட்லி மாவை ஊற்ற வேண்டும் ரெண்டு இட்லி சட்டியை மூடி சரியாக பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும் அதற்கான அடையாளம் இட்லி சட்டியை திறந்து அதனால் நம் கையை விட்டு பார்க்க வேண்டும் மாவு வரவில்லை என்றால் (Idli)இட்லி வெந்து விட்டது என்ற அர்த்தம்.உடனே சாப்பிடுவதற்கு பரிமாறலாம்.
இட்லியின் வகைகள்
இந்த இட்லிகளின் வகைகள் பல வகைகள் உண்டு நாம் உடலுக்கு தேவையான முறையிலும் நம் ருசிக்கு தேவையான முறைகளும் இட்லியை சமைக்கலாம்.
இப்பொழுது குழந்தைகளுக்கு இட்லி என்றால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் சாப்பிடுவாள் அப்படி சாப்பிடுபவர்களுக்கு பல வகையான இட்லி தயார் செய்து தரலாம்.
எடுத்துக்காட்டாக இப்பொழுது குழந்தைகளுக்கு மாதுளம் பழம் பிடிக்கும் என்றால் மாதுளம் பழச்சாறு எடுத்து அதனுடன் (Idli)இட்லி மாவை கலந்து இட்லி பொட்டி எடுத்தால் மாதுளம் பழம் இட்லி ரெடியாகிவிடும் இதனுடன் நாட்டுச் சர்க்கரை வைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்ணும் இவ்வாறு உங்களுக்கு தேவையான பழங்களில் இட்லி செய்து தரலாம்.
இதையும் வாசியுங்கள் : மஞ்சள் கிழங்கின் 5 மருத்துவ குணங்கள்
மருத்துவத்தில் இட்லியின் பங்கு
இட்லி அனைத்து நோயாளிகளுக்கும் தரப்படும் ஒரு சிறந்த மருந்து ஆஸ்பத்திரிகள் டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஒரே உணவு (Idli)இட்லி மட்டும் தான் இந்த இட்லியை நாம் தினமும் உட்கொண்டால் நம் உடலில் உள்ள கார்போரைட் அளவு சீராக இருக்கும் அது மட்டுமல்லாமல் நம் உடலில் சீராக செரிமானம் ஆகக் கூடிய உணவு இந்த இட்லி.
இட்லியில் உள்ள புளிக்க வைக்கும் தன்மையானது நமது உடலுக்கு தேவையான நல்ல நுண்உயிர்கள் இந்த புளிக்க வைக்கும் நேரத்தில் உருவாகின்றது ,அதுமட்டுமல்லாமல் மற்ற உணவு போல் இல்லாமல் அதனை நீராவியில் வேகா வைக்கும் பொழுது இந்த நல்ல நுண்உயிர்கள் செயலிழக்காமல் இருக்கின்றது.
இந்த நல்ல நுண்உயிர்களால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு சத்து குறைகிறது இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இந்த இட்லியை தொடர்ந்து எடுத்து கொண்டால் உடல் எடை குறைந்து சீரான உடலை பெறுவீர்கள் என்று இந்திய உணவு ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
அதுமட்டுமல்லால் உலக தலை சிறந்த நீராவி உணவாக இந்த உணவு சொல்லப்படுகிறது இந்த இட்லியில் கைக்குத்தல் அரிசியை வைத்தும் இந்த இட்லி சமைக்கலாம் .