வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் நோய் (Ulcer)அல்சர் என சொல்லக்கூடிய குடல் புண் அல்லது இரைப்பை புண் என்ற நோயை பற்றியும் அந்த அல்சரை நமது உடலில் இருந்து எப்படி முழுமையாக நமது வீட்டில் உள்ள இயற்கையான உணவுகளை வைத்தே பூரா குணப்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
அல்சரை(Ulcer) பற்றி சில
அல்சர்(Ulcer) என்றால் எல்லாரது மனதிலும் ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படும்,ஒவொரு நோய்க்கும் ஒருவிதமான காரணங்கள் இருக்கும்,அந்த நோய் சரியாவதற்கு இந்த மாதிரியான உணவுகள் எடுத்து கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் நம்மிடம் பல ஆலோசனைகள் தருவார்கள் டாக்டர்கள் கூறியது போல் உணவை எடுத்து கொண்டால் அந்த நோய்கள் படிப்படியாக பூரண குணம் அடைந்து விடும்.
அனால் இந்த அல்சரானது நாம் சாப்பிடும் உணவினாலேயே வருகிறது,இந்த நோய் நமது உடம்பில் வர காரணம் சரியான உணவை எடுத்து கொள்ளாமல் இருத்தல் மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் தங்களது இஷ்டத்தில் காலை உணவை மதியம் 11.00 மணிக்கு எடுத்து கொள்வது ,அதுமட்டுமல்லாமல் சாப்பிடக்கூடிய நேரத்தில் டீ மற்றும் காபி என எடுத்துக்கொள்வது,மற்றும் மத்திய உணவை மாலை 4.00 மணிக்கு எடுத்து கொள்வது மற்றும் இரவு உணவை இரவு 11.00 எடுத்து கொள்வது என்ற அடிப்படையில் நேரம் மாறி உணவுகளை எடுத்து கொண்டால் இந்த அல்சர் புண்கள் நமது வயிற்றில் அதாவது இரைப்பையில் உண்டாகும்.
இந்த வகை நோய் உருவாவதற்கு முக்கிய காரணங்கள் சரியான நேரத்தில் சாப்பிடாத மட்டும் அல்ல நாம் கடைகளில் வாங்கும் காரமான உணவு வகைகளும் மற்றும் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள திண்பண்டங்களும் அதுமட்டுமில்லாமல் பாஸ்ட் புட் என்ற உணவும் நமது வயிறு பெரிதும் கிடைக்கின்றது இவ்வாறு அல்சர் நோய்க்கு உண்டாகும் நம்மை நமது வீட்டில் இல்ல எளிய இயற்கையான பொருட்களை வைத்து முழுமையாக சரி செய்து கொள்ளலாம்.
மேலும் தெரிந்துகொள்ளுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
அல்சர்(Ulcer) நோயை குணப்படுத்தும் முறை
அல்சர் (Ulcer) நோயை பூரண குணபடுத்த முடியும் ,அதற்கு முன்னாள் நமது உணவு கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும்.முதலில் காரத்தன்மையுள்ள உணவுகளை அறவே நிறுத்த வேண்டும்.அதன் பின்பு எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை தவிர்க்க வேண்டும் அத பின்பு அதிக எண்ணெய் பலகாரங்கள் வடை ,மிச்சர் ,பூரி ,இறைச்சி ,பாஸ்ட் புட் ,இது போன்ற உணவுகளை நிச்சியமாக தொடவே கூடாது அதுமட்டுமல்லாமல் ஐஸ் கிரீம் போன்ற குளிர் பானங்களை சாப்பிட கூடாது.
காலையில் வெறும் வயித்திலேயே இந்த சீரகம் தண்ணிர் தேன் எடுத்துகிட்டீங்க அப்படின்னா அந்த புண்களை வளர விடாது ஆற்றிக்கொண்டே இருக்கும் சீரான அகத்தை ஏற்படுத்தக் கூடியதா சீரகம், தேனை பற்றி நான் சொல்லவே வேண்டாம், சீரகம் கலந்த தேன் அருந்தினால் இந்த குடல் ஒரு நல்ல அருமையான நாளுக்கு தயாராகிவிடும்.
உணவிலேயே மிகவும் ரொம்ப முக்கியமா இந்த அல்சர் இருக்கிறவங்களுக்கு அதிகமா சேர்த்துக்க வேண்டிய ஒண்ணுன்னா கீரை தான் எல்லா கீரையும் நல்லது ஆனா ரொம்ப நல்லதுன்னா, ஒன்று மணத்தக்காளி கீரை இன்னொன்று அகத்தி கீரை, இந்த மனத்தக்காளி கீரை எல்லாம் ஊர்களிலும் கிடைக்க கூடிய ஒரு கீரை தான், இந்த மணத்தக்காளி கீரையை காலையில வெறும் வயித்துல ஒரு பத்து கீரை எடுத்து நல்ல அலசிட்டு வெறும் வாயில மென்னு சாப்டீங்க அப்படின்னா எவ்வளவு பெரிய வயிற்று புண்ணாக இருந்தாலும் ஒரு மூணு நாள்ல அப்படியே குணமாயிடும். இல்ல அது ரொம்ப கசப்பா இருக்கு எங்களால் அதை சாப்பிட முடியல அப்படின்னா, அதை பருப்பு போட்டு கூட்டு பண்ணி சாப்பிடலாம் இல்லனா சூப் வைத்து சாப்பிடலாம் அது ரொம்ப நல்லது.
இதையும் வாசியுங்கள் : இதயத்தை பாதுகாக்கும் இஞ்சியின்4 மருத்துவ பயன்கள்
அல்சரின் அறிகுறி
நமது உடலில் அல்சர்(Ulcer) என்ற குடல் புண் வந்துவிட்டது என்பதற்கான அந்த நோயின் அறிகுறி நமது நெஞ்சு எலும்புக்கு கீழே நெஞ்சு எரிச்சல் ,அல்லது லேசான நெஞ்சு வலி ,அல்லது குமட்டல் என இது போன்று ஏதேனும் மாற்றம் இருந்தால் நமக்கு அல்சர் நோய் வந்துவிட்டது என கருதலாம் ,உடனே மருத்துவமனைக்கு சென்று இந்த நோயை உறுதி செய்து கொள்ளலாம். ஏனென்றால் நெஞ்சு வலியான மாரடைப்புக்கு இதே அறிகுறிதான் ,அதனால் தான் மருத்துவமனைக்கு சென்று உறுதி படுத்த வேண்டும்.
அல்சர் வந்து விட்டது என எண்ணி கவலை பட வேண்டாம். அதனை 100 சதவீதம் எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்து விடலாம்.கீழே உள்ள முறைப்படி உணவுமுறைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அல்சரை(Ulcer) போக்கும் உணவு முறைகள்
அல்சரை(Ulcer) நமது அன்றாடம் சாப்பிடக்கூடிய எளிய உணவுகளை வைத்தே சரி செய்து விடலாம்,முதலில் நீங்கள் காலை எழுந்தவுடன் சூடான உணவுகளை தவிர்த்திடுங்கள் ,முக்கியமாக பாக்கெட் பால் அல்லது டீ எடுத்து கொள்ள வேண்டாம் அதற்கு பதிலாக நல்ல பழங்கள் எடுத்து கொள்ளுங்கள்.
அல்சரை குணப்படுத்துவதில் பெரிதும் நமக்கு உதவியாக இருப்பது தேங்காய் பால் தேங்காய் பால் எவ்வாறு செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேங்காய் பாலுக்கு தகுதியான தேங்காய்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும் தேங்காய் பாலுக்கு அதிக பருப்பு உள்ள காய்களை தேர்வு செய்ய வேண்டும் அதிகமான கருமையான தேங்காயை தேர்வு செய்து அதில் தான் அதிக பருப்பு இருக்கும் அதனை உடைத்து உங்களால் திருக முடிந்தால் அதனை திருக்கலாம் அப்படி இல்லை என்றால் அதனை வெட்டி ஒரு நல்ல வடிகட்டியை வைத்து வடிகட்டி தான் சுத்தமான தேங்காய் பால் கிடைக்கும் அந்த தேங்காய் பாலுடன் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒரு 20 நாளைக்கு குடித்து வர வயிற்றில் உள்ள (Ulcer) புண்கள் இரைப்பையில் உள்ள புண்கள் வெகு சில நாட்களிலேயே மாறிவிடும்.
தேங்காய் பால் வயிற்றுப் புண்ணை மட்டும் ஆற்றும் தன்மை கிடையாது உடம்பில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி தரும் அது மட்டுமல்லாமல் நிறைய பேர்கள் தேங்காய் பால் ஒரு கெட்ட கொழுப்பு சத்து அதில் உள்ளது என நினைத்துக் கொண்டிருக்க உண்மையில் அது தவறான விஷயம் தேங்கா பால் நல்ல கொழுப்புகள் மட்டுமே உள்ளது இவ்வகையான கொழுப்புகள் நம் உடலில் பல்வேறு நல்ல செயல்களை செய்து நம் உடலை பாதுகாக்க செய்ய வேண்டும்.