uses of tubers: நமது உடலுக்கு தேவையான சக்தியை தரும் கிழங்கு வகைகளும் பயன்களும்
uses of tubers
கிழங்கு(tubers) வகைகளும் பயன்களும்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் சத்து மிக்க கிழங்கு வகைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம். கிழங்கு(tubers) என்பது பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய ஒரு தாவரமாகும் மண்ணுக்கு மேலே விளையக்கூடிய தாவரத்திற்கு ஒரு சக்தி உண்டு அதேபோல் மண்ணுக்கு கீழே விளையக்கூடிய தாவரத்திற்கு ஒரு சக்தி உண்டு நாம் அதிகமாக உண்ணும் அரிசி மண்ணுக்கு மேலே விளையக்கூடிய ஒரு பொருளாகும் இதில் எவ்வளவு அளவுக்கு கார்போஹைட்ரேட் அளவு உள்ளது அதைவிட பல மடங்கு அதிகமாக வன்னுக்கு கீழே விளையும் கிழங்குகளில் இருக்கும். இதை சாப்பிடுவதால் நமக்கு அதிக சக்திகள் கிடைக்கும் உடம்புக்கு தேவையான வைட்டமின்கள் பல்வேறு நோய்களைப் போக்கும் மருத்துவ குணங்கள் படைத்த கிழங்கு வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
கிழங்கு வகைகளை அடிக்கடி உணவு சேர்த்துக் கொள்ளாமல் மிதமான அளவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் உடம்பில் கெட்ட கொழுப்புகள் தாங்காது. ஒவ்வொரு கிழங்குகளும் என்னென்ன பயன்கள் தரும் என்னென்ன மருத்துவ குணங்கள் தரும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் தானியங்களுக்கு அடுத்தபடியாக கிழங்குகளுக்கு தான் அதிக முக்கியம் தருவார்கள்.
இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
கருணைக்கிழங்கு
கருணைக்கிழங்கு(tubers) பொதுவாக மண்ணுக்கு கீழே விழும் ஒரு மகத்தான கிழங்கு இந்த கிழங்கை வேகவைத்து அதன் தோலை நீக்கி புளிக்குழம்பு வைத்து வாரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டால் நமது உடலில் உள்ள கார்போஹைட்ரேட் அளவு சீராக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும் மற்றும் நார்ச்சத்துக்கள் நமது உடலில் அதிகமாக சேரும் அது மட்டுமல்லாமல் மூலம் இருப்பவர்கள் இந்த கிழங்கினை வாரத்திற்கு மூன்று தடவை சாப்பிட்டு வர மூலத்தில் உள்ள அரிப்பு வலி ஏற்படாது. இந்தக் கிழங்கினை பச்சையாக சாப்பிடக்கூடாது உங்கள் நாக்கு ஊறத் தொடங்கிவிடும்.
பீட்ரூட்
பீட்ரூட் என்பது அனைவருமே அது ஒரு காய்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அது ஒரு கிழங்கு(tubers) வகைகளாகும் பீட்ரூட் பத்தி யாருக்கும் தெரியாமல் இருக்காது அது உடலில் எண்ணற்ற பலன்களை நமக்குத் தருகிறது பீட்ரூட் தினமும் எடுத்துக் கொண்டால் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை உயரும் ரத்த சோகை மலச்சிக்கல் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும் இதனை பச்சையாக அப்படியே சாப்பிடலாம். வேக வைத்தும் சாப்பிடலாம் இந்தக் காய்கறிகள் அதிக அளவு வைட்டமின்களும் அதிக அளவில் ஆண்டிபயோட் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு உணவாகும் அது மட்டுமல்லாமல் கர்ப்பிணி தாய்மார்கள் இந்தக் கிழங்கினை அரைத்து ஜூஸா குடித்து வர இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு(tubers) அனைவருக்கும் தெரிந்த ஒரு கிழங்காகும் இதனை நாம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்கின்றோம் இது ஓரளவுக்கு கெடுதல் என்றாலும் பல நபர்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் இருக்கும் இந்த கிழங்கினை அடிக்கடி தொடர்ந்து சாப்பிட்டால் புரதச்சத்து வைட்டமின் குறைபாடுகள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் நீங்கும் அது மட்டும் இல்லாமல் தாய்மார்களுக்கு அதிக அளவில் பால் சுரப்பதற்கு இந்த கிழங்கு உபயோகமாக இருக்கிறது. அதேபோல் வளரக்கூடிய குழந்தைகளுக்கு இந்த கிழங்கினை நன்கு வேக வைத்து கொடுத்து வந்தால் குழந்தையின் வளர்ச்சி வேகமாக செயல்படும். வயதானவர்கள் இந்த கிழங்கு அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் இந்த கிழங்கு ஒருவித செரிமான பிரச்சனையை அவர்களுக்கு உண்டு செய்யும்.
மேலும் தெந்துகொள்ளுங்கள் : 2 நாளில் நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ்
சேப்பைக்கிழங்கு
சேப்பைக்கிழங்கு(tubers) அதிக அளவு யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் ஏனெனில் அது அரிதான ஒரு கிழங்கு ஆகும் இந்த கிழங்கினை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது அது நமது உடலில் பெரிதளவு செரிமான பிரச்சினையை உண்டு செய்யும் என்ன கிழங்கினை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும் இந்த கிழங்கு முக்கியமாக ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் மட்டும் சாப்பிட வேண்டும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வர ஆண்மை குறைபாடு நீங்கும் விந்து அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கை(tubers) பற்றி நான் யாருக்கும் சொல்லித் தெரியவில்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு கிழங்கு ஆகும் இந்த கிழங்கு நமது உடலில் பல நல்ல விஷயங்களை செய்கிறது நமது உடம்பிற்கு தேவையான புரோட்டின் வைட்டமின் பொட்டாசியம் மெக்னீசியம் என அனைத்து சத்துகளும் இந்த கிழங்கில் அதிக அளவில் உள்ளது நமது உடலில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை நீக்கும் குடலில் உள்ள தேவையில்லாத நுண்ணுயிர்களை அழித்து வயிற்றை சுத்தமாக வைக்க செய்யும்.
முள்ளங்கி
முள்ளங்கியும் கிழங்கு(tubers) வகையில் ஒன்றான ஒரு தாவரமாகும் முள்ளங்கி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கிறது அது மட்டுமல்லாமல் நம் உடம்பிற்கு தேவையான சுண்ணாம்பு சக்தியும் அதிகரிக்கிறது அதிக உடல் சூடு உள்ளவர்கள் இந்த முள்ளங்கியை தினமும் சாப்பிட்டு வர உடல் சூடு குறையும். நமது உடம்பில் பசியின் தன்மையை அதிகரிக்கும் செரிமான பிரச்சனையை சரி செய்யும் முள்ளங்கியை குழந்தைகளுக்கு நன்கு வேக வைத்து கொடுக்க வந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.
சிறு கிழங்கு
சிறு கிழங்கு(tubers) அதிகமாக தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் ஒரு கிழங்கு வகைகளாகும் இந்த கிழங்கு அதிகமாக வெப்ப மண்ணில் விளையக்கூடிய ஒரு கிழங்குகளாகும், இது மிகவும் ருசியானதாகவும் நமது உடலுக்கு தேவையான அதிக தாது பொருட்களை கொண்ட கிழங்கு வகைகளாகும். இந்த கிழங்குகளை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம் நம் உடலில் உள்ள ரத்த அழுத்தம் கண் பார்வை நமது எழும்புக்கு பெரிதும் பலன் சேர்க்கும் சிறந்த கிழங்காகும்.
நாம் உண்ணும் உணவு அனைத்தும் இறைவன் படைப்பில் பெரிதும் நம்மை காக்கிறது ஆனால் இயற்கையான உணவுகளை உண்டு நான் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்காமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோம் இன்னும் ஏராளமான கிழங்கு வகைகள் உள்ளது. அந்தக் கிழங்குகள்(tubers) பல வேலைகளை நம் உடம்பில் செலுத்தி நம் உடலை ஆரோக்கியமாக வைக்கச் செய்கிறது.