weight lose tips: வீட்டில் உடல் எடையை குறைக்க 5 வழிகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் அனைவரும் பெரிதும் கவலைப்படக்கூடிய விஷயம் நம் (weight lose) உடலின் எடை கூடுதல் அதை எவ்வளவு முயற்சி செய்தாலும் குறைவதாக இல்லை நாமும் நிறைய அன்பு மாத்திரைகளை அதற்காக எடுத்து பணத்தையும் நமது உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.
நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் சிறப்பானது அவர்களில் யாராவது எடை அதிகமாக இருப்பதை பார்த்திருக்க மாட்டீர்கள் ஏனெனில் அவர்களின் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அந்த அளவுக்கு மிகவும் கஷ்டமானது அவர் உழைப்பு மிகவும் கடுமையானது அதேபோல் இப்பொழுது உள்ள உணவு முறைகள் அப்பொழுது கிடையாது வெறும் வயிற்றில் கஞ்சி அருந்தி வேலை பார்ப்பார்கள் ஆனால் இப்பொழுது உள்ள பிள்ளைகளுக்கு கஞ்சி என்றால் தெரியாது.
அது மட்டும் அல்லாமல் அவர்கள் சாப்பிட்டது இயற்கையான ரசாயனம் கலக்காத உணவு வகைகள் கம்பு திணை ராகி கைக்குத்தல் அரிசி என சொல்லிக் கொண்டே போகலாம் அவர்களின் சாப்பாட்டு முறை அதேபோல் அவர்கள் செய்யும் வேலை எந்த அளவுக்கு மிக கடினமானது என்று நமது அப்பா அம்மாக்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள், நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம் உடலின் நிலையை மிகவும் சுலபமாகவும் மற்றும் எந்தவித மாத்திரை மருந்து எடுத்துக் கொள்ளாமலும் எளிய முறையில் உடல் (weight lose) எடையை குறைக்கலாம் அதனைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
உடலை குறைக்க உதவும் மனகட்டுப்பாடு
நாம் உடலை சுலபமாக குறைக்க முடியும், அதற்கு மிகவும் முக்கியமான காரணம் நம்முடைய மனக்கட்டுப்பாடு நாம் பல்வேறு இடங்களில் உடல் எடையை குறைப்பதற்கு செலவு செய்திருப்பீர்கள், அவ்வளவு செய்த கொண்டு சிறிதளவு எடை (weight lose) குறைந்தவுடன் மறுபடியும் அதுதான் எடை குறைந்து விட்டதே, மறுபடியும் நல்ல மாமிசங்களையும் மற்றும் மதுபானங்களையும் அருந்தலாம் என உங்களது மனம் உங்களை தூண்டும் அவ்வாறு இருந்தால் எந்த காலத்திலும் உங்களது எடை குறைவே குறையாது ,உங்களின் பணம் மட்டும் செலவாகிக் கொண்டு இருக்கும், நம்முடைய மனதிற்கு நம்மை ஆளாக கூடாது நாம் சொல்வது தான் மனம் கேட்க வேண்டும் என்ற புதிய கோட்பாட்டை கொண்டு வர வேண்டும் அதுவே எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் படி இப்பொழுது எடை குறைக்க என்னென்ன வழிமுறைகள் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
இதையும் வாசியுங்கள் : இதயத்தை பாதுகாக்கும் இஞ்சியின்4 மருத்துவ பயன்கள்
உடலை குறைக்க உதவும் பழ வகைகள்
காலை எழுந்தவுடன் எலுமிச்சம் பழம் கலந்த தேனீர் பின்பு காலை உணவாக பழ வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், மற்றும் மதிய உணவாக அதிகமான நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும், மற்றும் சாதம் மிகவும் குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும், மற்றும் இரவு உணவாக பழங்கள் அல்லது பச்சை காய்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், அதனை சாப்பிட முடியவில்லை என்றால் நன்கு காய்கறிகளை வதக்கி சாப்பிட வேண்டும் இவ்வாறு ஒரு நாளைக்கு தொடர்ந்து சாப்பிட்டால் உங்களது உடம்பிற்கு தேவையான கலோரிகள் சரியான அளவில் கிடைக்கும், முதல் 10 நாட்களுக்கு இந்த உணவு முறை எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளும் பொழுது மிகவும் கடினமாக இருக்கும், அதனை நாம் பொறுத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பத்து நாட்களில் உங்கள் உடல் (weight lose) எடை இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ குறைவதை நீங்கள் உணரலாம்.
சாப்பிடக்கூடாத உணவுகள்
சாப்பிடக்கூடாத உணவுகள் என்றால் நிறைய வகைகள் கொண்டது அதில் நீங்கள் கண்டிப்பாக பால் அல்லது கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கக்கூடாது தயிர் வெண்ணெய் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும் இரண்டாவதாக கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள இட்லி தோசை சாப்பாடு இவற்றையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும், மற்றும் கிழங்கு வகைகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும், மற்றும் சிறுதானியங்கள் எல்லாத்தையும் தவிர்க்க வேண்டும் இதனை எல்லாம் முழுமையாக சாப்பிடாமல் இருந்தாலே உங்களது எடை குறைய தொடங்கிவிடும், உங்களது எடை சரியான அளவில் வந்தவுடன் நீங்கள் இதை அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் மாமிசம் இறைச்சி மற்றும் முட்டை இவை அனைத்தையும் தொடவே கூடாது, பருப்பு வகைகள் பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு வகையான பருப்புகள் எடுத்துக் கொள்ளக் கூடாது, இது எல்லாம் சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே உங்கள் எடை (weight lose) குறைய தொடங்கிடும்.
சாப்பாட்டு முறையை கட்டுப்பாட்டில் வைத்தாலே உடல்நிலை குறையுமா என்றால் அப்படி கிடையாது உங்கள் எடை குறைவிற்கான காரணம் சாப்பாட்டு முறை வெறும் 40 சதவீதம் மட்டுமே 60 சதவீதத்தில் உடற்பயிற்சி மற்றும் மன கட்டுப்பாடு உள்ளது.
இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
உடற்பயிற்சி முறைகள்
உடல் எடையை குறைப்பது இரண்டாவது பங்கு நாம் செய்யும் உடற்பயிற்சி தான் உடற்பயிற்சி என்றால் ஜிம்முக்கு சென்று தான் உடலைக் குறைக்க வேண்டும் என்ற வழிமுறைகள் கிடையாது, நாம் எளிமையான முறையில் உடல் பயிற்சி செய்யலாம் காலை எழுந்தவுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் வாக்கிங் சென்று வந்தால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வியர்வைகள் வழியாக வெளியேறிவிடும் மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் செய்தால் உங்கள் உடலுக்குத் தேவையான நல்ல சக்திகள் உங்களுக்கு கிடைக்கும், அது மட்டும் அல்லாமல் உங்கள் உடம்பில் தங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கள் வாக்கிங் செல்லும் பொழுது அது கலைய தொடங்கிவிடும் இவ்வாறு தினமும் செய்து கொண்டால் உங்கள் உடல்நிலை சீராக இருக்கும் அது மட்டுமல்லாமல் மேலும் உங்களுக்கு உடல் பருமனாக முடியாது நீங்கள் உடல் எடையை குறைக்க மட்டும் இந்த வாக்கிங் செய்ய தேவையில்லை எப்பொழுதுமே செய்தால் உங்கள் உடல்நிலை(weight lose) சீராக இருக்கும்.
உடல் பருமனால் வரும் நோய்கள்
உடல் பருமனால் பல வியாதிகளுக்கு நம் உடல் பாதிப்பாகும் அவற்றில் நமக்கு எதுவுமே தெரியாது உடல் பருமனால் நம்மளுடைய ரத்த ஓட்டம் சீராக இருக்காது அதனால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் ஆங்காங்கே தங்கிவிடும் இது இதய நோயான மாரடைப்பு ஏற்படுத்தும் அது மட்டுமில்லாமல் உடல் நாம் சுவாசிக்கும் காற்று சீராக இல்லாமல் ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் வரும் அது மட்டுமல்லாமல் உடல் புறமாக ஏற்படக்கூடிய சுகர் ரத்தக்கொதிப்பு என பல்வேறு வியாதிகளுக்கு உள்ளாக வேண்டியது வரும் இதனால் உடல் எடையை (weight lose) குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிவக நீங்கள் தான் உற்சாகமாக இருக்க வேண்டும்.