turmeric benefits: மஞ்சளின் மருத்துவ குணங்கள்
turmeric benefits: வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நம் நாட்டில் இயற்கையாக கிடைக்க கூடிய மிகவும் அற்புதமான உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மஞ்சளின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் வரலாற்றை பற்றி பார்க்கலாம் வாங்க.
மஞ்சளின் வரலாறு
மஞ்சள் 1500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கண்டுபிடிக்க பயன்பட்டது ,முதலில் இதனை சமையலுக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது ,அதற்கு பிறகுதான் இதனை மருத்துவத்திற்கு கொண்டு வந்தனர் சித்த மருத்துவத்தில் (turmeric )மஞ்சள் மிகவும் அதிகமாக பயன்படுத்த பட்டுள்ளது.இது ஒரு கிருமி நாசினியாக பயன்பட்டு வருகிறது ,அதுமட்டுமல்லாமல் சமையல்களில் வாசனை பொருள்காளாகவும் பயன்படுத்தி வருகிறது ,இதன் ஆங்கில பெயர் டுமாறிக் என அழைக்கபடுகிறது,இது ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது. மஞ்சளில் பலவகைகள் உண்டு விரலி மஞ்சள் ,கஸ்தூரி மஞ்சள் ,உருட்டு மஞ்சள் ,காட்டு மஞ்சள் ,இது போன்று பல வகைகளில் மஞ்சள் உள்ளது.
மஞ்சளின் மருத்துவ பயன்
நமது நாட்டின் மிகவும் முக்கியமான சமையல் மற்றும் ஆன்மீகம் மற்றும் அழகு சாதன பொருளாக (turmeric) மஞ்சள் பயன்படுகிறது ,சமையல்களில் நிறமூட்டிகளாகவும் மற்றும் கிருமிநாசினியாக பயன்படுகிறது,சளி மற்றும் இருமல் மற்றும் முகப்பரு மற்றும் முகப்பொலிவு போன்ற உடலில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு எளிய தீர்வாக மஞ்சள் பயன்படுகிறது ,எந்த நோய்களுக்கு மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் .
சளி
சளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு சாதாரண நோய் தான் அனால் அதனை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை ,சளி பிடித்தவுடன் இருமல் மற்றும் தும்மல் மற்றும் காய்ச்சல் என் பல பிரச்சனைக்கு உள்ளாகிவிடும் இந்த சளி, உடனே எல்லோரும் ஆங்கில மருத்துவரை அணுகி ஊசி மற்றும் மாத்திரை எடுத்துக்கொள்ளவோம் ,ஆனால் அந்த மாத்திரை தற்காலிகமாக மட்டும் நம்மளை சளியிடம் இருந்து காப்பாத்தும் .
சரியான முறையில் முழுமையாக சளியை வெளியேற்றும் சித்த மருந்துகளில் (turmeric) மஞ்சள் ஒரு பங்கு வகிக்கிறது ,சளிபிடித்து தொண்டை கரகரப்பாக இருந்தால் சூடான நீரில் சிறிது மஞ்சள் சேர்த்து மற்றும் லேசாக உப்பு சேர்த்து நன்கு கொப்பளித்து வர தொண்டையிலுள்ள புண்கள் மற்றும் தொண்டை வலி முழுமையாக சரியாகிவிடும் .
இருமல்
நம் வாழ்வில் இருமல் நம்மளை பெரிதும் தொந்தரவு செய்வது இந்த இருமல் தான் சிறியவர்கள் முதல் அணைத்து வயதினருக்கும் தொல்லைகொடுக்கும் இந்த இருமல் சிலருக்கு விடவே விடாது எதனை மருந்து மாத்திரை எடுத்தாலும் சரியாகுவது போல் இல்லை ,இருமலில் இரண்டு வகை உண்டு ஒன்று வரட்டு இருமல் மாற்றுன்று சளி இருமல்.
இந்த வறட்டு இருமலை போக்க சில எளிய வழிகள் உள்ளது ,அவற்றில் துளசி மற்றும் சிறுது மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்து நன்கு கொதிக்க வைத்து சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட இருமலும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து விடும்.
மூட்டு வலியை குறைக்கும் மஞ்சள்
மூட்டு வலி என்பது இப்போது உள்ள காலங்களில் சாதாரண நோயாக மாறிவிட்டது .அந்தக்காலத்தில் மூட்டு வலி குறைவாகத்தான் இருந்தது ,இப்போது உள்ள உணவு பழக்கம் நம்மளை அந்த அளவுக்கு ஆக்கியுள்ளது ,அந்த காலத்து முறைப்படி எப்படி இந்த மூட்டு வலி ,முடக்குவாதம் ஆகியவற்றை குணப்படுத்துவது என பார்க்கலாம் .
சிறுது மஞ்சள் கிழங்கு மற்றும் நன்கு காய்ந்த வத்தல் மற்றும் சிறிது கல் உப்பு ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு மிகவும் நைஸ்ஆகா அரைத்து கொள்ள வேண்டும் ,அதனை தேங்கஎண்ணையில் ஊறவைத்து மூட்டு வலி எங்குள்ளதோ இரவு தூங்குவதற்கு முன்பு அங்கு நன்கு ஒரு பசைபோல் தடவ வேண்டும்,காலை எழுந்த உடன் சூடான நீரில் கழுவிட வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வர நம் கால்களில் உள்ள எலும்பு மஜ்ஜைகளில் உள்ள ஒருவிதமான சுரப்பி சுரந்து நம் கால்வலியை குறைகிறது ,அது எண்ணெய் பசைபோல் மாறுகிறது ,மற்றும் கால் உராய்வை தடுக்கிறது .
நம் முகத்தை அழகாக்கும் மஞ்சள்
பெண்கள் அவர்களது முகத்தை எப்பொழுதும் நல்ல பொலிவுடன் வைத்திருக்க எத்தனையோ விதவிதமான ஆங்கில மருந்துகள் உபயோகித்து வருகின்றனர் ,அண்ணலை அந்த காலத்தில் நம் பாட்டிமார்களும் நமது அம்மாக்களும் நல்ல முகத்துல மஞ்சள் தேச்சு குளிமா என நம்மிடம் கூறியிருப்பார்கள்.
நாமும் சிறுவயதில் அதனை செய்து விட்டு இப்பழுது உள்ள காலத்துக்கு ஏற்ப (makeup kit) மேக்கப் கிட் வாங்கிவைத்து தினமும் அந்த ரசாயனத்தை நமது முகத்தில் தேய்த்து வருகிறோம்,அதிலும் அந்த நிறுவனம் என்ன சொல்லும் மஞ்சள் மற்றும் சந்தனத்தின் நற்குணம் படைத்தது ,என விளம்பரம் செய்து நம்மளை ஏமாற்று வருகிறது.நாமும் அதனை நம்பி தினமும் அதனை பயன்படுத்தி வருகிறோம்.
நமது முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் அணைத்து ரசாயன மருந்துகளை எடுத்து கொள்ளாமல் நமது பாட்டி கூறும் இயற்கையான நமது ஒரிஜினல் மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி நமது தேகத்தை பொலிவு செய்ய முடியும்.
நமது முகத்தை இயற்கையான முறையில் அழகாக இருக்க வேண்டும் என நினைத்தால் மஞ்சளை எடுத்து கொள்ள வேண்டும் ,அவற்றில் மஞ்சள் பல வகைகள் உண்டு அதில் உருட்டு மஞ்சள் (turmeric) அல்லது கஸ்தூரி மஞ்சள் எடுத்து கொள்ள வேண்டும். அதனை பொடியாக்கினாலும் சரி அல்லது கருங்கல்லில் தேய்த்தாலும் சரி அதனை எடுத்து நீங்கள் குளிக்கும் பொழுது இந்த மஞ்சளை எடுத்து நன்கு முகம் மற்றும் கைகள் மாற்றும் கால்கள் மற்றும் உடம்பில் அணைத்து இடங்களில் தேய்க்க வேண்டும் ,கஸ்ரதுரி மஞ்சளை தேய்த்தால் நன்கு மணமாக இருக்கும்.
இவ்வாறு தினமும் தேய்த்து வந்தால் நம் முகத்தில் உள்ள முகபரு மற்றும் நமது தோலில் வரக்கூடிய தேமல் ,அலர்ஜி மற்றும் தோல் நோய்களும் நீங்கும் ,நீங்கள் தேய்க்கும் மஞ்சள் அழகுக்கும் மட்டுமல்லாமல் ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படும்.
புண்களை குணப்படுத்து மஞ்சள்
நமது உடலில் ஏற்படக்கூடிய அணைத்து காயத்திற்கும் இந்த மஞ்சளை ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம், நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் மஞ்சளை பொடியாக்கி அதனை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காயம் ஏற்பட்ட இடத்தில் போட்டால் புண் விரைவில் குணமாகும் அதுமட்டுமல்லால் அந்த புண்ணில் நீர் மற்றும் சலம் ஏதும் வைக்காமல் பாதுகாக்கும்,ஒரு சிறந்த கிருமி நாசினியாக மஞ்சள் நம்மை காக்கும் .
One Comment