Benefits of greens: உடலுக்கு நன்மைகள் தரும் கீரைகளின் பயன்கள்
வணக்கம் நண்பர்களே நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பல காய்கள் பழங்கள் என உள்ளது, ஆனால் நாம் முக்கியமாக சாப்பிட வேண்டிய உணவுகளில் கீரை வகைகள் பெரும் பங்கை வகிக்கிறது, நம்முடைய உணவில் அடிக்கடி இந்த கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும், அப்படி சேர்த்துக் கொண்டால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும், நம் உடலில் ஏற்படும் சிறு சிறு நோய்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி பெரிதும் உதவியாக இருந்து நம்மை காக்கும், இந்த கீரைகளின் நன்மைளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
கீரை (greens) என்றாலே சில பேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது, ஆனால் கீழே உள்ள சத்துக்கள் சொல்ல முடியாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது, நமக்குத் தெரிந்த கீரைகள் சிறுகீரை அரைக்கீரை என இருக்கும் கீழே பலகைகள் உண்டு, அவரைப் பற்றி ஒவ்வொரு கீரைகளையும் அவற்றின் பயன்களையும் பற்றி பார்க்கலாம்.
கலவை கீரை
கலவைக் கீரை (greens)என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒரு கீரை ஆகும் இந்த கீரை அதிகமாக கிராமப்புறங்களில் விளையும் இந்த கீரையை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டால் இதயம் பலவீனமாக இருப்பவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அனைவரும் விரும்பி சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் சரியாகிவிடும்.
மேலும் தெந்துகொள்ளுங்கள் : cold : 2 நாளில் நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ்
முளைக்கீரை(greens)
முளைக்கிறேன் நாம் வாரத்திற்கு இரண்டு நாள் எடுத்துக் கொண்டால் நம் உடலில் ஏற்படக்கூடிய சளி பிரச்சனைகள் இருமல் பிரச்சனைகள் ஆகியவற்றை போக்கும் அதுமட்டுமல்லாமல் சில பேர் அதிகமாக உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு பசி இருக்காது அது போன்ற நபர்களுக்கு இந்த கீரை மிகவும் உயர்ந்ததாக இருக்கும் ஏனெனில் இந்தக் கீரை சாப்பிட்டால் அதிக பசியை தூண்டும் மற்றும் தோல் நோய்களான அரிப்பு படர்தாமரை போன்ற நோய்களை போக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நன்றாக சாப்பிடக்கூடிய கீரையாகும் இந்த முளைக்கீரை.
புளிச்சக்கீரை
இந்தக் கீரையின் பெயரிலேயே அதன் ருசியும் அடங்கியுள்ளது ஆமாம் இந்த கீரை மிகவும் புளிப்பு தன்மை உள்ள கீரை(greens) இந்த கீரை சாப்பிட்டால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேறி உடல் சீரான நிலையை அடையும் அது மட்டுமல்லாமல் அதிகமாக ரத்த கொதிப்பு உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு சீராகிவிடும் அது மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படக்கூடிய உடல் சூட்டை வெகு சீக்கிரம் சரியாகிவிடும்.
குப்பைமேனி கீரை
இந்தக் கீரையை அதிகம் யாரும் உண்பது கிடையாது ஏனெனில் இது கிராமப்புறங்களில் ரோடு ஓரம் விளையக்கூடியது இதற்கு நல்ல பயன்கள் உள்ளது ஆனால் இதை யாரும் அதிக அளவில் விரும்புவது கிடையாது இந்த கீரையை சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிகமான பசியை தூண்டும் அது மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய வலிகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியதாகும் அதுமட்டுமல்லாமல் இந்த கிச்சனையை நன்கு பசை போல் அரைத்து அதனை முகத்தில் பூசி நன்கு காய் விட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள பருக்கள் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
அகத்திக்கீரை
அகத்திக்கீரை(greens)பொதுவாக கசப்பு தன்மை உடையது அதனாலயே இதை யாரும் அதிக அளவில் உண்பது கிடையாது அது மட்டும் அல்லாமல் இதை மாட்டுக்கு உணவாக கொடுக்க மட்டுமே நாம் வாங்குகிறோம் இந்த கீரையில் உள்ள பயன்கள் நம் உடல் உள்ள எலும்புகளை வலுப்படுத்தவும் பித்தத்தைப் போக்கவும் மிகவும் பயன்படுகிறது.
இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரை(greens) பற்றி தெரியாத ஆட்களே கிடையாது இந்த முருங்கைக் கீரையை அதிக அளவில் யாரும் உண்பது கிடையாது இந்தக் கீரையும் சிறிது கசப்பு தன்மை உடையதாக இருக்கும் இந்த கீரையை அதிகமாக கர்ப்பிணி பெண்கள் கொண்டால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அதிகமாகும் இதை பொரித்தும் சாப்பிடலாம் அப்படியே சூப் வைக்கும் சாப்பிடலாம் இரும்புச்சத்து நிறைந்த ஒரு அற்புதமான கீரை அதுமட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள இரைப்பை போல் குடல் புண் ஆகியவற்றை போக்கும்.
பசலைக் கீரை
பசலைக் கீரை(greens) எளிதில் கிடைக்காது தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் உள்ள ரத்த அணுக்கள் சீராக செயல்படும் அது மட்டுமல்லாமல் புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் நம் உடலில் உள்ள மலச்சிக்கல் நீர்க்கடுப்பு போன்றவை சீக்கிரம் குணமாக்கும் தன்மை உடையது.
சிறுகீரை
இந்த வகையான கீரை எளிதில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒரு கிரையாகும் இந்த கீரைகள் உள்ள பயன்கள் சிறு வயது குழந்தைகளுக்கு இந்த கீரையை வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து கொடுத்து வந்தால் பிள்ளைகளின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும் அது மட்டுமல்லாமல் சிறுநீர் நோய் அனைத்தையும் முழுவதுமாக நீக்கி விடும்.
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரை(greens) நாம் உடலில் உள்ள வயிற்று புண் அதாவது அல்சர் எனக் கூடிய நோய்களை வெகு சில நாட்களிலேயே குணப்படுத்தக்கூடிய தன்மை உள்ள அந்த கீரை உடலில் உள்ள சோர்வை அகற்றும் அதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யவும்.
வல்லாரைக்கீரை
வல்லாரைக் கீரை(greens) ஐந்து வயது முதல் கல்லூரி படிக்கும் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு கீரைகள் ஆகும் இந்தக் கீரை அதிக ஞாபக சக்தியை கொடுக்கும் கீரைகள் ஆகும் மூளைகளில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கீரை தீர்வாக இருக்கும்.
பொன்னாங்கன்னி கீரை
இந்த கீரை(greens) தமிழ்நாட்டில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும், இந்த பொன்னாங்கண்ணிக் கீரை வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து நோய் தொற்றாதவாறு பார்த்துக் கொள்ளும் அதுமட்டுமல்லாமல் நெஞ்சு எரிச்சல் நெஞ்சில் உள்ள கொழுப்பை நீக்கும் உடலில் கபத்தை நீக்கும் அது மட்டும் அல்லாமல் வயிற்றுப்புண் ஆகியவற்றை குணப்படுத்தக்கூடிய அவர் அரிய கீரை வகைகள் ஆகும்.
தூதுவளைக் கீரை
தூதுவளைக் கீரை(greens) பற்றி தெரியாத ஆட்களை எடுக்க முடியாது இது சளிக்கு மிகவும் பயனுள்ள அக்கறைகள் ஆகும் இந்த கீரையை வதக்கி சாப்பிட முடியாது இதை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால் உடலில் உள்ள சளிகள் அனைத்தும் நீங்கும்.
இதுபோன்ற நிறைய கீரைகள் நம் நாட்டில் குவிந்து உள்ளனர் இந்த கீரை வகைகள் அதிகமாக நம் உணவில் எடுத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் நோயில்லாமல் வாழ வழி வகுக்கும்.